Friday, April 23, 2010

திருத்தல நிழற்படங்கள்

அறிமுகம்

கடிநெல்வயல் என்ற அழகிய கிராமம் வேதாரணியம் (திருமறைக்காடு) - திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள கருப்பம்புலம் என்ற சிறு நகரத்தில் இருந்து மூன்று மைல் தொலைவில் உள்ளது.

இந்த கடிநெல்வயல் என்றாலே அருகில் உள்ள சுற்றுவட்டார மக்களுக்கு வேம்புத்யார் கோயில் தான் உடனடியாக நினைவுக்கு வரும்.அந்த அளவிருக்கு பிரசத்தி பெற்ற கோயில் இந்த வேம்புடையார் கோயில்.

வேம்புடையார் என்ற பெயர் அய்யனாரை குறிக்கிறது.வேம்படி+அய்யனார் என்பதன் சுருக்கமே வேம்புடையார்.மிகவும் சக்தி வாய்ந்த இந்த திருத்தலம் பல குடும்பங்களுக்கு குலதெய்வமாகவும் விளங்கி வருகிறது.